சுமார் 600 வருடங்களுக்கு முன்
தஞ்சை மாவட்டத்தில் அயோத்திபட்டி என்ற சிறிய கிராமத்தில் மருதம்மாள் என்ற ஏழை கைம்பெண் தன ஆண் குழந்தையுடன் வாழ வழிதெரியாமல் சாப்பிடகூட வழி இல்லாமல் வாழ்ந்து வந்தாள்,அப்போது அயோத்திபட்டியிலிருந்து 20 கி.மீ தொலைவில் குளத்தருகே உள்ள ஒரு ஆல மரம் அடியில் பசி மயக்கத்தில் உறங்கினாள் ,அந்த காலத்தில் பாஸ்க்கு திருவிழாவை காண தெற்கு சீமையில் உள்ள சருகணி என்ற ஊருக்கு பலபேர் குழுவாக செல்லும் வேளையில் அந்த ஆலமரத்துக்கு அடியில் பசியாய் இருந்த அந்த மருதம்மாளுக்கும் குழந்தைக்கும் அந்த பாத யாத்திரை குழு பசிக்கு உணவு தந்து ,அவர்கள் இருவரையும் சருகணி க்கு கூட்டி சென்றார்கள்,அங்கே திருவிழா கூட்டத்தில் மருதம்மாள் தன் குழந்தையை தொலைத்து விடுகிறாள் .
திருவிழா முடிந்து அந்த பாதயாத்திரை குழு மருதம்மாளை அழைத்து செல்ல கூப்பிடும் போது தனது குழந்தை இல்லாமல் நான் வரவில்லை என்று கூறவே,அந்த பாதயாத்திரை குழு மருதம்மாளை பங்கு தந்தையிடம் ஒப்படைத்து , நாங்கள் ஊருக்கு செல்கிறோம் அப்படி உன் மகன் கிடைத்துவிட்டால் மீண்டும் எங்கள் ஊருக்கு எதிர்காலத்தில் வாருங்கள் அப்போது உங்கள் மகனுக்கு பெண் கொடுத்து எங்கள் உறவில் உங்களையும் சேர்த்து கொள்கிறோம் என்று சொல்லிவிட்டு கிளம்பினர்.மறுநாள் ஒரு முதியவர் அந்த குழந்தை அழுவதைக்கண்டு சமாதானம் சொல்லி பங்கு குருவிடம் கூட்டிக்கொண்டு வந்து மருதம்மாளிடம் சேர்த்தார் ,அவளும் சந்தோஷமாக தன மகனை அனைத்து கொண்டாள் ,இப்படியே வருடங்கள் பல ஓடின.
மருதம்மாளும் ,அந்த குழந்தையும் ஞானஸ்தானம் பெற்று கிறிஸ்தவ மதத்துக்கு மாறினார் ,மருதம்மாளின் பெயர் பிச்சையம்மா,சிறுவனின் பெயர் சவரிமுத்து ,ஆலயத்தில் பனி செய்வதும்,ஜெபம் செய்வதுமாக பல ஆண்டுகள் சென்றபின் ஒருநாள் அவர்கள் இருவரும் பங்கு குருவிடம் சொல்லிவிட்டு சொந்த ஊருக்கு பயணம் ஆனார்கள்,சிறுவன் சவரிமுத்துக்கு 12 வயது இருக்கும் ,சவரிமுத்து பாடல்களை நன்றாக பாடுவான் ,அப்படி வழி தோறும் பாடிக்கொண்டு வரும் போது ,வரும் வழில் உள்ள ஒரு வசதியான பெரியவர் சிறுவனின் பாட்டை கேட்டு தன் வீட்டுக்கு அழைத்து சென்று உணவளிக்க ஏற்பாடு செய்தார் ,சிறுவன் சவரிமுத்து அந்த ஊரின் பெயர் மங்கனூர் என தெரிந்து கொண்டான் ,இவர்களின் ஏழ்மை நிலையை அறிந்த பெரியவர் அவர்கள் இருவரையும் வீட்டு வேலை செய்யவும்,ஆடு மேய்க்கவும் நியமித்தார்.
அதன் படி சவரிமுத்து ஒருநாள் ஆடு மேய்க்கும் போது அசதியில் மரத்தின் நிழலில் அயர்ந்து தூங்கிகொண்டு இருந்தான்,அப்படி ஒருநாள் தூங்கும் போது சவரிமுத்து கனவு கண்டான்,புனித செபஸ்தியார் காட்சி தந்து "மகனே எனக்கு இங்கு ஒரு ஆலயம் எழுப்பி,காலையும் ,மாலையும்,செபங்கள் செய் என்று சொல்லி மறைவது போல கனவு கண்டான்.அனால் சவரிமுத்து இந்த கனவை விளையாட்டாக எடுத்து கொண்டு பாடிக்கொண்டும்,ஆடுகள் மேய்த்துக்கொண்டும் இருந்தான் ,அடுத்த நாளும் அதே கனவு,அதே நேரத்தில் வந்தது.மீண்டும் சிறுவன் அதை பொருட்படுத்தவில்லை.
மூன்றாம் நாளில் அதே நேரம்,சவரிமுத்து தூங்குகிறான்,அப்போது "மகனே!மகனே!" என்ற குரல் கேட்டு திடுக்கிட்டு எழுந்தான் ,கண்களெல்லாம் கூசின ,சவரிமுத்து பயந்து போய் யாரது ?என்று கேட்டு கொண்டு பார்த்த பொழுது ,அங்கே மின்னும் ஒளியுடன் ,புதுமை புனித செபஸ்தியார் காட்சி தந்தார்,மகனே பயம் கொள்ளாதே,நான்தான் நோய் நொடிகளை தீர்க்க வந்த புனித செபஸ்தியார் ,இனி நீ எங்கேயும் செல்ல வேண்டாம்,உன்னிடம் கனவில் வந்து இருமுறை சொன்னேன் ,நீ கண்டுகொள்ளவில்லை,இப்பொழுது நேராகவே சோல்கிறேன் கவனமாக கேள் ,என் பெயரில் ஒரு ஆலயம் எழுப்பு,உன்னையும் உன் சந்ததிகளையும் ,என்னை தேடி நம்பிக்கையோடு வருபவர்களையும் காத்து அருள் புரிகிறேன் என்று சொல்லி மறைந்தார் புனித செபஸ்தியார் .
சவரிமுத்துக்கு இந்த சம்பவம் சற்று வித்தியாசமாக இருந்தது,மாலை ஆனதும் தன தாயிடம் சென்று அனைத்தையும் சொன்னான்,அதை கேட்டு என்ன சொல்கிறாய் செபஸ்தியார் காட்சி அளித்தாரா?என் என்னிடம் முன்பே சொல்லவில்லை,உடனே புறப்பட்டு,ஆனவர் காட்சி கொடுத்த ஆலமரத்துக்கு என்று சொல்லி மகனை அழைத்துக்கொண்டு புறப்பட்டாள் ,அங்கு இருந்த புல்;செடி,கொடிகளை அழித்து பனை ஓலையால் சிறிய குடிசை செய்து அதில் செபஸ்தியார் சுரூபம் வைத்து வழிபட்டு வந்தனர்,அன்று முதல் அந்த மங்கனூரில் பரவி வந்த காலரா நோய் முற்றிலும் நீங்கியது ,மங்கனூர் செபஸ்தியாரின் புதுமை பரவத்தொடங்கியது.
எனவே சிறிய குடிசையை களைந்துவிட்டு சின்ன ஆலயமாக அமைக்க நினைத்தனர்,அவர்கள் இருவரும் ,ஆனால் பணவசதி இல்லாததால் ,வீடு வீடாக பாட்டு பாடி,பணம் சேர்த்து சிறியதாக ஆலயம் எழுப்பினார்கள்,இவ்வாறு இவர்கள் வீடு வீடாக பாடியதால் பாடுவான் என அழைக்க பட்டார்கள் ,இன்று வரை மங்கனூரில் வாழும் இந்த வம்சத்தினருக்கு பாடுவான் என்ற பட்டபெயர் உண்டு.,மங்கனூரில் இருந்து கொண்டு பல புதுமைகளை செய்ததால் மங்கனூர் செபஸ்தியார் புகழ் பட்டி தொட்டியெங்கும் பரவி , மங்கனூர் வரும் மக்களின் எண்ணிக்கையும் அதிகம் ஆனது ,சவரிமுத்து தன உழைப்பில் ஒரு சிறிய தேரை செபஸ்தியாருக்கு செய்து அந்த ஆண்டு முதல் திருவிழாவையும் சிறப்பாக செய்து முடித்தான்.
குறிப்பு (சவரிமுத்து க்கு திருமணம் செய்ய அவனின் தாய் கழுமங்களம் சென்று பெண் கேட்டாள்,அவர்களும் சொன்னபடியே பெண் தந்தார்களாம் ,இந்த சவரிமுத்துக்கு ஏழு ஆனண் பிள்ளைகள் பிறந்தனர்,அந்த ஏழு பிள்ளைகளின் வம்சத்தினர் தான் இன்றுவரை இந்த ஆலயத்தில் இருந்து நிர்வாகம் செய்யும் கோயில்பிள்ளை களாக இருந்து வருகிறார்கள்,இன்று வரை ஏழு எட்டு தலைமுறைகள் வந்துவிட்டன.செபஸ்தியார் கள்ளி மரத்தில் கட்டிவைத்து ஏழு அம்புகளால் எய்யப்பட்டு வீர மரணம் அடைந்தார்,அதனால்தான் இந்த ஏழு ஆண் பிள்ளைகள் என்றும் சொல்கின்றனர்.இவ்வாறாக இந்த ஏழு குடும்பத்தில் உள்ள ஆட்களின் உருவத்திலும்,தனது நிஜ உருவத்திலும் வந்து எண்ணிலடங்கா புதுமைகள் செய்து வருகிறார் மங்கனூர் மாவீரர் புனித செபஸ்தியார்.